இபிஎஸ் படத்தை எரித்த பாஜக நிர்வாகி இரவில் நீக்கம்; காலை மீண்டும் சேர்ப்பு!

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி நேற்றிரவு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

அதிமுக இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை எரித்த பாஜக நிர்வாகி நேற்றிரவு நீக்கப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் கட்சியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாஜகவில் இருந்து விலகிய தகவல் தொழில்நுட்பக் குழுவினரை அதிமுகவில் இணைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இரு கட்சிகளும் கூட்டணியில் தொடர்ந்து வரும் நிலையில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட இளைஞர் அணி மாவட்டத் தலைவர் தினேஷ் ரோடி இபிஎஸ்ஸுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது புகைப்படத்தை எரித்துள்ளார்.

இதையடுத்து கட்சியின் நிலைபாட்டை மீறி செயல்பட்டததற்காக மாவட்ட மையக்குழுவின் ஒப்புதலோடு தினேஷ் ரோடி வகித்து வரும் பொறுப்புகளிலிருந்து 6 மாத காலம் விலக்கி வைப்பதாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளர் வெங்கடேசன் சென்னகேசவன் நேற்று அறிவித்திருந்தார்.

இந்நிலையில், மாவட்ட செயலாளரின் அறிவிப்பை ரத்து செய்து மாவட்ட இளைஞரனி தலைவர் பொறுப்பில் தினேஷ் ரோடி தொடர்வார் என்று தமிழக பாஜக தலைவரின் ஒப்புதலோடு மாநில பொதுச் செயலாளர் பொன்.வி.பாலகணபதி அறிவித்துள்ளார்.

இரவில் மாவட்ட செயலாளரால் நீக்கப்பட்ட நிர்வாகி, காலையில் மாநிலப் பொதுச் செயலாளரால் சேர்க்கப்பட்ட சம்பவம் மாவட்ட பாஜகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com