தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள்: பிரதமர் மோடி

இந்தியாவில் 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 
தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள்: பிரதமர் மோடி

இந்தியாவில் 7 மாநிலங்களில் மெகா ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். 

இதுதொடர்பாக பிரதமர் மோடி கூறுகையில், 

தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகம், மகாராஷ்டிரம், குஜராத், மத்தியப் பிரதேசம், உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும். மித்ரா மெகா ஜவுளி பூங்காக்கள் ஜவுளித்துறையை மேலும் வலுப்படுத்த உதவும் என்றார். 

புதிதாக அமைக்கப்படவுள்ள ஜவுளி பூங்காக்கள் ஜவுளித்துறைக்கான அதிநவீன உள்கட்டமைப்பை வழங்கும். கோடிக்கணக்கான முதலீட்டை ஈர்க்கும் மற்றும் லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும். மேக் இன் இந்தியா மற்றும் 'மேக் ஃபார் தி வேர்ல்ட்' என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாக இருக்கும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் ஜவுளித் தொழிலுக்குப் புத்துயிர் அளிக்கும். பல்வேறு வகையான ஜவுளிகளுக்கான உலகளாவிய மையமாக இந்தியா மாற உதவும் என்று பிரதமர் கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com