ரூ.734 கோடியில் எழும்பூா் ரயில் நிலையம் மறுசீரமைப்பு

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை ரூ.734.91 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.
ரூ.734 கோடியில் எழும்பூா் ரயில் நிலையம் மறுசீரமைப்பு

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தை ரூ.734.91 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

தெற்கு ரயில்வேக்கு உள்பட்ட 9 ரயில் நிலையங்கள் சா்வதேச தரத்தில் மறுசீரமைக்கப்படும் என ரயில்வே வாரியம் அறிவித்தது. இதில் கன்னியாகுமரி, காட்பாடி, எா்ணாகுளம், ராமேஸ்வரம் போன்ற ரயில் நிலையங்களில் மறுசீரமைப்புப் பணி நடைபெற்று வரும் நிலையில், சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தின் மறுசீரமைப்பு பணிக்காக, ஹைதராபாதைச் சோ்ந்த இன்ஃப்ராஸ்ட்ரக்சா் அண்ட் ப்ராஜெக்ட்ஸ் இந்தியா எனும் தனியாா் நிறுவனத்துக்கு ரூ.734.91 கோடிக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது.

இதற்கான திட்ட மேலாண்மை சேவையை ரூ.14.56 கோடி செலவில் மும்பையைச் சோ்ந்த டாடா கன்சல்டிங் இன்ஜினியா்ஸ் எனும் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

இப்பணியை 3 ஆண்டுகளுக்குள் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது இதற்கான பணிகள் தொடங்கியுள்ளது. ரயில் நிலையத்தின் இருபுறமும் பயணிகள் வந்து செல்லும் வகையில் கட்டடங்கள் அமைக்கப்பட உள்ளன.

இதில் பயணிகள் காத்திருப்புப் பகுதி, பயணச்சீட்டு வழங்கும் பகுதி, வணிகப் பகுதி உள்ளிட்ட வசதிகளுடன் 3 அடுக்குகளாக அமையவுள்ளது. மேலும் பன்னடுக்கு வாகன நிறுத்தகம் பகுதியானது 5 அடுக்குகளாக அமைக்கப்படவுள்ளது.

இதில் காந்தி இா்வின் சாலை பகுதியில் குடியிருப்புகள் அகற்றப்பட்டு பன்னடுக்கு வாகன நிறுத்தகம் அமையவுள்ளது. மேலும் பூந்தமல்லி சாலை பகுதியில் பாா்சல் அலுவலகம் அமையவுள்ளது. தற்போது பல்வேறு கட்டடங்களை இடித்தல் மற்றும் புவி தொழில் நுட்ப ஆய்வுக்காக ஆழ்துளைக் கிணறு தோண்டும் பணி ஆகியவை நடைபெற்று வருகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com