
கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் இன்று(மே-3) நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூவாகம் கிராமத்திலுள்ள கூத்தாண்டவர் திருக்கோயிலில் சித்திரைத் தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கடந்த 18 ஆம் தேதி சாகை வார்த்தலுடன் திருவிழா தொடங்கிய நிலையில், கூவாகம் கூத்தாண்டவா் கோயில் சித்திரைப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக, பூசாரிகளிடம் திருநங்கைகள் தாலி கட்டிக்கொள்ளும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை நடை பெற்றது.
இதைத் தொடர்ந்து, கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் இன்று(மே-3) நடைபெற்றது. தொடர்ந்து, பலிகளத்துக்குச் சென்ற திருநங்கைகள் தங்களது வளையல்களை உடைத்து, பூக்களை பீய்த்தெறிந்து, பூசாரிகளிடம் தாலியை அறுத்துக் கொண்டு, அருகில் நீராடி, வெள்ளை உடை அணிந்து விதவைக் கோலம் பூண்டு தங்களது சொந்த ஊர் திரும்பினர்.
இந்த தேரோட்டத்தில் பல்லாயிரக்கணக்கான திருநங்கைகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.