டாஸ்மாக் வருமானத்தில் அரசை நடத்த வேண்டிய அவசியமில்லை என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, 'மால்களில் டாஸ்மாக் கடைகளினுள்தான் மது பானங்களை வழங்கும் தானியங்கி இயந்திரம் வைக்கப்பட்டுள்ளது. 21 வயதுக்கு குறைவானவர்களால் அதை எடுக்க முடியாது. ஆனால் எதிர்க்கட்சிகளும் சில ஊடகங்களும் தவறான தகவல்களை பரப்பி வருகின்றன. சாலையிலோ, பொது இடங்களிலோ இந்த தானியங்கி இயந்திரம் இருப்பது போல எதிர்க்கட்சிகள் பேசி வருகின்றன. மால்களில் டாஸ்மாக் கடைகள் அதிமுக ஆட்சியில்தான் கொண்டுவரப்பட்டன.
டாஸ்மாக்கில் ரூ. 5, ரூ. 10 என கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்த 1,977 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 5.5 கோடி அபராதம் அவர்களிடமிருந்து வசூல் செய்யப்பட்டுள்ளது.
தற்போதுவரை 92 கடைகள் மூடப்பட்டுள்ளன, மேலும் 500 கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணிகள் நடந்து வருகின்றன.
டாஸ்மாக் வருமானத்தை வைத்துதான் அரசை நடத்த வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை' என்று பேசினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.