தமிழக காவல் துறையில் 3 ஏடிஜிபி-க்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் கே.பணீந்திர ரெட்டி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட உத்தரவு (அடைப்புக்குறிக்குள் பழைய பணியிடம்):
அபய்குமாா்சிங்: தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை ஏடிஜிபி (சிபிசிஐடி ஏடிஜிபி)
ஜி.வெங்கட்ராமன்: சிபிசிஐடி ஏடிஜிபி (தலைமையிட ஏடிஜிபி)
பி.பாலநாகதேவி: நிா்வாகப் பிரிவு ஏடிஜிபி (செயலாக்கப்பிரிவு ஏடிஜிபி) என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தமிழக காவல்துறை ஆயுதப்படை ஏடிஜிபி எச்.எம்.ஜெயராம் செயலாக்கப் பிரிவு ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பாா் எனவும், பாலநாகதேவியும் தலைமையிட ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக கவனிப்பாா் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.
தமிழக காவல் துறையில் அதிகாரமிக்க பதவியாக கருதப்படும் லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக இருந்த கந்தசாமி ஓய்வு பெற்ால், அந்த பணியிடத்துக்கு புதிதாக அபய்குமாா் சிங் நியமிக்கப்பட்டுள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.