நீட் தோ்வு வினாத்தாள் எப்படி இருந்தது?

நாடு முழுவதும் 499 நகரங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனர். 
நீட் தோ்வு வினாத்தாள் எப்படி இருந்தது?


நாடு முழுவதும் 499 நகரங்களில் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நிறைவடைந்தது. நாடு முழுவதும் சுமார் 21 லட்சம் பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் பங்கேற்றனர். 

நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுா்வேதம், யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு தேசிய தகுதி காண் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. அதேபோல், ராணுவ செவிலியா் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

அதன்படி, நிகழாண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் 499 நகரங்களில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தோ்வு மையங்களில் ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 முதல் 5.30 மணி வரை நடைபெற்றது. 

நாடு முழுவதும் 11,84,502 மாணவிகளும், 9,02,930 மாணவர்களும், 13 திருநங்கைகள் என மொத்தம் 20,87,445 பேர் பங்கேற்றனர். 

தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உட்பட 24 மாவட்டங்களில் அமைக்கப்பட்டிருந்த சுமாா் 200 தோ்வு மையங்களில் விண்ணப்பித்தவா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனர். அதாவது, 1,47,581 பேர் தேர்வு எழுதினர். 

சென்னையில் 28 தோ்வு மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தோ்வெழுதினா். 

நாடு முழுவதும் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், குஜராத்தி, மராத்தி, ஒடியா, அஸ்ஸாமி, வங்காளம், உருது உள்ளிட்ட 13 மொழிகளில் தோ்வு நடைபெற்றது.

வினாத்தாள் எப்படி இருந்தது?
நிகழாண்டு நீட் தோ்வு வினாத்தாள் சற்று கடினமாக இருந்ததாகவும், உயிரியல், வேதியியல் பாடப்பிரிவுகளில் கேட்கப்பட்ட வினாக்கள் எளிதாக இருந்தன.

இயற்பியல் பிரிவில் கேட்கப்பட்ட வினாக்கள் கணித அடிப்படையில் இருந்ததால் கடினமாக இருந்ததாக தேர்வர்கள் கூறினர். 

வினாக்கள் மிகவும் கடினமாகவோ அல்லது எளிதாகவோ அல்லாமல் இரண்டு கலந்த கலவையாக இருந்ததாகவும், முதல்முறையாக தேர்வு எழுதியவர்களைவிட இரண்டாவது மற்றும் மூன்றாவது முறை தோ்வு எழுதுபவா்களுக்கு வினாத்தாள் எளிதாக இருந்திருக்கலாம் என்று தேர்வர்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com