
கோப்புப்படம்
பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளைமுதல் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு, விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் நாளை காலை 11 முதல் 13 ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விடைத்தாள் நகலுக்கு ரூ.275யும், மறுகூட்டலுக்கு ரூ.205யும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரு.300 கட்டணமாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, புதுச்சேரியில் பிளஸ் 2 தேர்வு பொதுத்தேர்வு எழுதிய சுமார் 8 லட்சம் மாணவ, மாணவிகளின் தேர்வுகள் திங்கள்கிழமை(மே 8) வெளியானது. தேர்வு முடிவுகளை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 8,51,303 மாணவ, மாணவிகள் பிளஸ் 2 பொதுத்தேர்வை எழுதினர். தமிழ்நாட்டில் மட்டும் 8,36, 593 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர். அவர்களது தேர்வு முடிவுகள் இன்று திங்கள்கிழமை வெளியானது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...