
தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து முதல்வர் கோப்பைக்கான இலச்சினை மற்றும் இணையதளத்தை, அறக்கட்டளையின் தூதுவர் தோனி வெளியிட்டார்.
சென்னை ஆர்.ஏ.புரத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர்கள் உதயநிதி, தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
அறக்கட்டளையைத் தொடக்கிவைத்து உரையாற்றிய முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளைக்கு தனிப்பட்ட முறையில் ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை வழங்குவதாக அறிவித்தார்.