

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. ஒட்டுமொத்தமாக 94.03 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர்.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் தோல்வி அடைந்தவர்களுக்காக துணைத் தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
தேர்வெழுதிய மாணவ, மாணவிகளில் 47,934 மோணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. தோல்வி அடைந்த மாணவர்களுக்கு ஜூன் 19ஆம் தேதி முதல் துணைத் தேர்வுகள் நடத்தப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது.
அனைத்துப் பாடங்களுக்கும் நடத்தப்படும் இந்தத் துணைத் தேர்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம். இந்தத் துணைத் தேர்வு நடைபெறும் நாள்கள் குறித்த அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூன் 19ஆம் தேதி மொழிப்பாடத் தேர்வு தொடங்குகிறது. ஜூன் 20ஆம் தேதி ஆங்கில மொழிப் பாடத்துக்கான தேர்வு நடைபெறும். தொடர்ந்து ஜூன் 21, 22, 23, 24, 26, 27, 28, 30, ஜூலை 1, 3, 4, 5 ஆகிய நாள்கள் வரை தேர்வுகள் நடத்தப்படவிருப்பதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.