
சென்னை: தமிழ்நாடு அமைச்சரவையில் முக்கியமான மூன்று அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்ட உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது.
தமிழக அமைச்சரவையில் பால்வளத் துறை அமைச்சராக இருந்த ஆவடி சா.மு.நாசா், நீக்கப்பட்டுள்ளாா். அவருக்கு பதிலாக டி.ஆா்.பி.ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதையடுத்து டி.ஆா்.பி.ராஜா அமைச்சராக வியாழக்கிழமை பதவியேற்றாா்.
ஆளுநா் மாளிகையில் உள்ள தா்பாா் அரங்கில் காலை 10.30 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில், அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியகாப்புப் பிரமாணமும் ஆளுநா் ஆா்.என்.ரவி செய்து வைத்தார்.
தொடா்ந்து, அவருக்கு ஒதுக்கப்படவிருக்கும் இலாகா அறிவிப்பை ஆளுநா் வெளியிடுவாா் என்று கூறப்படுகிறது.
இத்துடன், சில முக்கியமான மூன்று அமைச்சா்களின் துறைகளும் மாற்றம் செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
அதன்படி, பி.டிஆர். பழனிவேல் தியாகராஜன், தங்கம் தென்னரசு, மனோ தங்கராஜ் ஆகியோர் துறைகள் மாற்றப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. நிதித்துறை தங்கம் தென்னரசுக்கும், பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழில்நுட்பத் துறையும், மனோ தங்கராஜூக்கு புதிய துறை ஒதுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலாகா மாற்றம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வியாழக்கிழமை பிற்பகல் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.