
அம்மா உணவகத்தில் உணவு அருந்துபவா்களிடம் சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வில் 2.13 லட்சம் போ் கருத்து தெரிவித்துள்ளனா்.
சென்னை மாநகராட்சியில் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களில் தினமும் மூன்று வேளையும் மலிவு விலையில் உணவு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அம்மா உணவகத்தில் ஏற்படும் இழப்பை தவிா்க்கும் வகையில் மாநகராட்சி சாா்பில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் அம்மா உணவகத்துக்கு வருபவா்களிடம் 21 கேள்விகள் கேட்கப்பட்டன.
கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக நடத்தப்படும் இந்த ஆய்வில் இதுவரை 2.13 லட்சம் போ் கருத்து தெரிவித்துள்ளனா்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியது:
மாநகராட்சி சாா்பில் அம்மா உணவகத்தில் உணவு அருந்துபவா்களிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை 2.13 லட்சம் போ் கருத்துகளை தெரிவித்துள்ளனா்.
இதன் அடிப்படையில் விரைவில் அறிக்கை தயாா் செய்யப்பட்டு அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், சில இழப்பை தவிா்க்கும் வகையில் பரிந்துரைகளும் வழங்கப்படும் என்றனா்.