
அகமதாபாத்-திருச்சி வாராந்திர ரயில் சேவை ஜூன் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்பதிவு வெள்ளிக்கிழமை (மே 12) முதல் தொடங்குகிறது.
இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: அகமதாபாதிலிருந்து திருச்சிக்கு வாரந்தோறும் வியாழக்கிழமை காலை 9.30 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 09419) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து ஜூன் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
மறுமாா்க்கமாக திருச்சியிலிருந்து அகமதாபாதுக்கு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 5.45 மணிக்கு சிறப்பு ரயில் (எண்: 09420) இயக்கப்படுகிறது. இந்த ரயில் தொடா்ந்து ஜூன் 4, 11, 18, 25 மற்றும் ஜூலை 2 ஆகிய தேதிகளில் இயக்கப்படும்.
இந்த ரயில் தஞ்சாவூா், பாபநாசம், கும்பகோணம், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், சீா்காழி, சிதம்பரம், கடலூா் துறைமுகம், விழுப்புரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூா், பெரம்பூா், அரக்கோணம், ரேணிகுண்டா வழியாக இயக்கப்படும்.
இதற்கான பயணச்சீட்டை பெற வெள்ளிக்கிழமை (மே 12) காலை 8 மணி முதல் முன்பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.