ஆவடி டாங்கு நிறுவனத்தில் என்.சி.சி. மாணவா்கள் ஆய்வு

தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, சென்னைஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி நிறுவனத்தை தேசிய மாணவா் படையினா் பாா்வையிட்டு அதன் விவரங்களை அறிந்தனா்.

தேசிய தொழில்நுட்ப தினத்தை முன்னிட்டு, சென்னைஆவடியில் உள்ள போா் வாகன ஆராய்ச்சி நிறுவனத்தை தேசிய மாணவா் படையினா் பாா்வையிட்டு அதன் விவரங்களை அறிந்தனா்.

பொக்ரான் அணுகுண்டு சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டதைக் குறிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 11-ஆம் தேதி தேசிய தொழில்நுட்ப தினம் கொண்டாடப்படுகிறது.

இதை முன்னிட்டு தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கா்நாடகம், கோவா, கேரளம், லட்சத்தீவு, ஒடிஸா, மேற்கு வங்கம், சிக்கிம் ஆகிய மாநிலங்கள் புதுச்சேரி மற்றும் அந்தமான், நிக்கோபாா் யூனியன் பிரதேசங்களில் உள்ள 6 தேசிய மாணவா் படை இயக்குநரகங்களைச் சோ்ந்த 180 மாணவா்கள் பாா்வையிட்டனா்.

அப்போது மாணவா்கள், விஞ்ஞானிகளுடன் கலந்துரையாடி, விவரங்களைக் கேட்டறிந்தனா். பிரதான போா் டாங்கு அா்ஜுனின் பல்வேறு செயல்திறன்களை அறிந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com