மிகச் சிறப்பான ஆண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன் சொல்கிறார்

2023ஆம் ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டு என்று வானிலை குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுவரும் தமிழநாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மிகச் சிறப்பான ஆண்டாம்: தமிழ்நாடு வெதர்மேன் சொல்கிறார்


2023ஆம் ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டு என்று வானிலை குறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுவரும் தமிழநாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.

காரணம் என்ன? அப்படி என்ன சிறப்பான ஆண்டு? விடை இதோ அவரது பதிவிலிருந்து.

சென்னை உள்பட வடசென்னை பகுதிகளை ஊமை வெயில் தாக்கி வருகிறது. மீனம்பாக்கத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் அளவுக்கு தொட்டுள்ளது. அப்படிப்பார்த்தால் இந்த மாதத்தில் அதிகபட்ச வெயில் அடித்த முதல் நாளாக இன்று அமைந்துள்ளது.

கிட்டத்தட்ட இந்த ஆண்டு மிகச் சிறப்பான ஆண்டுதான், கோடை வெப்பம் தொடங்கி இத்தனை நாள்கள் வெயில் குறைந்திருந்ததே அதற்குக் காரணம். நிச்சயமாக நாளை சென்னை மீனம்பாக்கம், நுங்கம்பாக்கம் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவுக்குத் தொடலாம்.

இன்று குமரி, திண்டுக்கல், மதுரை மற்றும் இதர தென் மாவட்டங்களில் லேசான மழை பெய்யலாம். 

மோக்கா புயல் சின்னம் தீவிரமடைந்து, கண் பகுதி தற்போது உருவாகிவிட்டது. அதனைக் காண முடிகிறது என்று புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com