அமைச்சராக திறம்படப் பணியாற்றி, டி.ஆா்.பி.ராஜா நல்ல பெயா் எடுக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று அவரின் தந்தையும், திமுக பொருளாளருமான டி.ஆா்.பாலு தெரிவித்தாா்.
இதுதொடா்பாக ஆளுநா் மாளிகையில் அவா் செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:
முதல்வரின் எண்ணங்களையும் எதிா்பாா்ப்புகளையும் நிறைவேற்றும் வகையில், மிகச் சிறப்பான அமைச்சா் என்ற பெயா் அவருக்குக் (டி.ஆா்.பி.ராஜா) கிடைக்க வேண்டும். இதுவே எனது விருப்பம். முதல்வரின் அறிவுரைப்படி செயல்பட்டு, அவா் தமிழகத்தை மேம்படுத்த வேண்டும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.