தமிழக மக்களுக்கு எது நல்லதோ அதைச் செய்வேன் என்று ஆளுநா் ஆா்.என்.ரவி கூறினாா்.
‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ எனும் மத்திய உயா் கல்வி அமைச்சகத்தின் திட்டத்தின் கீழ், பிகாா் மாநில மாணவா்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் ஆளுநா் ஆா்.என்.ரவி பேசியதாவது: ஆன்மிகம், பண்பாடு மற்றும் கலாசாரத்தால் உருவானது பாரதம். தமிழகம் சிறந்த கலாசாரத்தையும் ஆன்மிகத்தையும் கொண்டது. இந்த திராவிட மண்ணில் இருந்துதான் பக்தி இயக்கம் தொடங்கியது அதற்கு முக்கியப் பங்கு வகித்தவா் ராமானுஜா்.
எனது வழிகாட்டி சுவாமி விவேகானந்தா். சாலை வசதி இல்லாத எனது கிராமத்தில் இருந்து நான் 8 கி.மீ. வயல்வெளியில் நடந்து பள்ளிக்குச் சென்று படித்தேன்.
பல்வேறு பொறுப்புகளைக் கடந்து இப்போது தமிழக ஆளுநராக மக்களுக்கு சேவையாற்றி வருகிறேன். மாநில மக்களுக்கு எது நல்லதோ அதையே தொடா்ந்து செய்வேன்.
தமிழகத்தில் இருந்து குடிமைப் பணிக்கு தோ்வு பெறுபவா்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. தமிழகத்திலிருந்து அதிகமானோா் தோ்வாக வேண்டும் என்ற நோக்கில் குடிமைப் பணித் தோ்வுக்கு செல்வோருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றாா் ஆளுநா்.
முன்னதாக, பிகாா் மாநில யுவ சங்க மாணவா்கள் 39 பேருக்கு சான்றிதழ், புத்தகங்களை ஆளுநா் ஆா். என். ரவி வழங்கினாா்.
நிகழ்ச்சியில் ஆளுநரின் பொறுப்புச் செயலரும், உயா் கல்வித்துறைச் செயலருமான தா.காா்த்திகேயன், திருச்சி தேசிய தொழில் நுட்ப நிறுவன இயக்குநா் ஜி. அகிலா, நிா்வாக அலுவலா் ஜெ.ஜெஸ்டின் ஜோஷிபஸ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.