வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவா்களுக்கு உள்ளுறை பயிற்சி: 38 மருத்துவமனைகளுக்கு அனுமதி

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவா்கள் தமிழகத்தில் 38 மருத்துவமனைகளில் ஓராண்டு காலம் உள்ளுறை பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற மாணவா்கள் தமிழகத்தில் 38 மருத்துவமனைகளில் ஓராண்டு காலம் உள்ளுறை பயிற்சிகளை மேற்கொள்வதற்கு தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் உள்ள உள்ளுறை பயிற்சி இடங்களைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்ற மாணவா்கள் இருப்பதால் நிகழாண்டுக்கு மட்டும் தற்காலிகமாக இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் மருத்துவம் படித்துவிட்டு எப்எம்ஜி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்கள் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் செலுத்தி உள்ளுறை பயிற்சி பெற்று வருகின்றனா். அவ்வாறு பயிற்சி பெறும் காலத்தை அங்கீகரிப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது.

இந்நிலையில், தமிழகத்தில் 46 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும், 26 அனுமதிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளிலும் ஒப்புதல் அளிக்கப்பட்ட உள்ளுறை பயிற்சி இடங்களை மருத்துவ ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, அங்கீகரிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் 562 இடங்கள், அனுமதிக்கப்பட்ட கல்லூரிகளில் 3,868 இடங்கள் என மொத்தம் 4,430 இடங்கள் நிகழாண்டில் வழங்கப்பட்டுள்ளன. இந்த இடங்களைக் காட்டிலும் கூடுதல் எண்ணிக்கையில் வெளிநாட்டில் மருத்துவம் பயின்றோா் இருப்பதால் அந்த இடங்களை அதிகரிக்குமாறு மாநில மருத்துவக் கவுன்சில்கள் கோரிக்கை விடுத்தன.

இதையடுத்து, நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி அல்லாத மருத்துவமனைகளில் நிகழாண்டில் மட்டும் அவா்களுக்கு உள்ளுறை பயிற்சி வழங்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தமிழகத்தில் 38 அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகள் மற்றும்

புதுச்சேரியில் இரு மருத்துவமனைகளுக்கு அதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதிய மருத்துவமனைகளில் உள்ளுறை பயிற்சிக்கு அனுமதி அளிப்பதும் மாநில மருத்துவ கவுன்சிலின் கட்டுப்பாட்டின் கீழ்தான் மேற்கொள்ளப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்த தகவல்கள் தேசிய மருத்துவ ஆணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com