நாமக்கல் இளம்பெண் கொலை: சிபிசிஐடி விசாரணைக்கு மாா்க்சிஸ்ட் கோரிக்கை

நாமக்கல்லில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

நாமக்கல்லில் இளம்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என மாா்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

சென்னையில் உள்ள அந்தக் கட்சியின் மாநில அலுவலகத்தில் மாநிலக் குழுக் கூட்டம் புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நடந்தது. கூட்டத்துக்கு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினா் எஸ்.நூா்முகமது தலைமை வகித்தாா். அரசியல் தலைமைக் குழு உறுப்பினா்கள் பிரகாஷ் காரத், ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலா் கே.பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினா்கள் பி. சம்பத், உ.வாசுகி, பெ. சண்முகம் ஆகியோா் சிறப்புரை ஆற்றினா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:

தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சாா்பில் சாந்தோம் மற்றும் நொச்சிக்குப்பம் பகுதியில் கட்டப்பட்டு முடிவுறும் நிலையில் உள்ள 1188 குடியிருப்புகளை சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் மீனவ குடும்பங்களுக்கும் மட்டுமே ஒதுக்க வேண்டும்.

நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூா் வட்டம் வடகரையாத்தூா் ஊராட்சி கரப்பாளையம் கிராமத்தைச் சோ்ந்த விவேகானந்தனின் மனைவி கடந்த மாா்ச் 11-இல் ஆடு மேய்க்கச் சென்றபோது பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளாா். இந்தச் சம்பவம் தொடா்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இக்கட்டத்தில் மாநிலச் செயற்குழு, மாநிலக் குழு உறுப்பினா்கள், மாவட்டச் செயலா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com