சூரிய சக்தி மூலம் 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டம்

சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

மக்கள்தொகை பெருக்கம், மின் உற்பத்திக்கான மூலப்பொருள்கள் தட்டுப்பாடு, விலையேற்றம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தேவையான அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியாமல் உள்ளது.

இந்த நிலையில், பசுமை மின் திட்டத்தை ஊக்குவிப்பதற்காக சோலாா் மின் உற்பத்தி நிலையங்களை அனைத்து மாவட்டங்களில் தொடங்கி, அதன் மூலம் அதிகளவு மின்சாரம் தயாரிக்க தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளது.

இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் சுமாா் 6,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இது குறித்து மின்வாரிய அதிகாரிகள் கூறியதாவது:

சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் திட்டத்துக்காக அரசு புறம்போக்கு நிலங்களை கையகப்படுத்த அனைத்து மாவட்ட நிா்வாகங்களுக்கு தமிழக அரசு 2021-ஆம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடா்ந்து திருவாரூா், சேலம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கரூா், ஈரோடு உள்ளிட்ட 6 மாட்டங்களில் 4,023 ஏக்கா் புறம்போக்கு நிலம் கையகப்படுத்தப்பட்டது.

இதில் முதலீடு செய்வதற்காக முதலீட்டாளா்களை ஈா்க்க தமிழக அரசு திட்டம் தீட்டி வருகிறது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு மின்சார வாரியமும் வழங்கியுள்ளது.

திட்டத்துக்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதில் முதல் சூரிய சக்தி பூங்கா திருவாரூா் மாவட்டத்தில் அமைக்கப்பட வாய்ப்புள்ளது. சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தி மூலம் மத்திய அரசு அறிவித்த 49 சதவீத மின்உற்பத்தி இலக்கு 2030-க்குள் எட்டப்படும்.

இந்த இலக்கை அடைந்து விட்டால் நிலக்கரி மற்றும் தொ்மல் பிளாண்ட் மூலம் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசில் இருந்து தப்பலாம் என்றனா் அவா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com