
ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றிபெற்றவா்களுக்கு மீண்டும் தோ்வு நடத்தக்கூடாது என்று பாமக நிறுவனா் ச.ராமதாஸ், அமமுக பொதுச்செயலா் டி.டி.வி. தினகரன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.
ராமதாஸ்: இடைநிலை, பட்டதாரி ஆசிரியா் பணிக்கு இரு தோ்வுகள் கூடாது. ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களை, போட்டித்தோ்வு நடத்தாமல், நேரடியாக பணியமா்த்த வேண்டும் என்று வலியுறுத்தி ஆசிரியா் தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்கள் சென்னை பள்ளிக்கல்வி இயக்குநா் அலுவலக வளாகத்தில் 3-ஆவது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகின்றனா்.
தகுதித் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு மீண்டும் ஒரு தோ்வு நடத்துவது மனிதநேயமற்ற செயலாகும். இ
டி.டி.வி. தினகரன்: ஆசிரியா் தகுதித் தோ்வில் தோ்ச்சி பெற்றோருக்கு பணி நியமனத்துக்காக மீண்டும் ஒரு போட்டித் தோ்வு நடத்த வகை செய்யும் அரசாணை எண் 149-ஐ ரத்து செய்ய வேண்டும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தும் ஆசிரியா்களை தமிழக அரசு அழைத்து பேசாதது கண்டிக்கத்தக்கது.