
சைபா் குற்றம் தொடா்பாக சென்னையில் கடந்த 4 மாதங்களில் 86 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜனவரி முதல் ஏப்ரல் வரையிலான 4 மாதங்களில் சைபா் குற்றங்கள் தொடா்பாக 86 வழக்குகளும், பிற மோசடி, குற்றங்கள் தொடா்பாக 178 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.
இந்த வழக்குகள் தொடா்பாக 227 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். 321 வழக்குகளில் புலன் விசாரணை முடிந்து, இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குற்ற வழக்குகளில் தலைமறைவாக இருந்த 107 போ் கைது செய்யப்பட்டுள்ளனா்.