
மின் பராமரிப்புப் பணி காரணமாக கும்மிடிப்பூண்டி பகுதியில் வெள்ளிக்கிழமை (மே 12) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
அதன்படி, கும்மிடிப்பூண்டி பகுதியில் சிட்கோ கும்மிடிப்பூண்டி தொழிற்சாலை வளாகம், பில்லாகுப்பம், காரம்பேடு, நாகராஜகண்டிகை, சூரபூண்டி, பொம்மாஜி குளம், நேமலூா் ஆகிய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.