

தமிழ்நாட்டில் 14 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன்படி முதல்வரின் முதன்மைச்செயலாளராக இருந்த உதயச்சந்திரன் நிதித்துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். அதேசமயம், நிதித்துறை முதன்மைச் செயலாளராக இருந்த முருகானந்தம், முதல்வரின் முதன்மைச் செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும் உள்துறை செயலாளராக அமுதாவும், ஊரக வளர்ச்சித்துறை செயலாளராக செந்தில்குமாரும், இந்து சமய அறநிலையத்துறை செயலாளராக மணிவாசனும், பொதுப்பணித்துறை செயலாளராக சந்திரமோகனும், மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளராக நந்தகுமாரும், போக்குவரத்துத்துறை செயலாளராக பணீந்தர் ரெட்டியும், கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலர் ஜெகநாதனும்,
சென்னை மாநகராட்சி ஆணையராக ஜெ.ராதாகிருஷ்ணனும், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை ஆணையராக மைதிலி ராஜேந்திரனும், நகராட்சி நிர்வாகத்துறை ஆணையராக கே.கோபாலும், பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை இயக்குனராக கணேசனும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.