
கோப்புப் படம்
தமிழ்நாட்டில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை மரக்காணத்தில் 14 பேரும், மதுராந்தகத்தில் 8 பேரும் உயிரிழந்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் வட்டம், எக்கியாா்குப்பத்தில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்தவர்களுக்கு கண் எரிச்சல், வாந்தி, மயக்கம் ஏற்பட்டு முண்டியம்பாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைகளில் மே 13, 14-ஆம் தேதிகளில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து, இன்று காலை சரவணன்(58), ராஜவேல்(49) ஆகிய இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். செங்கல்பட்டு மாவட்டம் மரக்காணத்தில் மாலை இருவர் உயிரிழந்தனர். இதனால், மதுராந்தகத்தில் பலி எண்ணிக்கை 7 ஆக இருந்தது. தற்போது மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் 14 பேரும், செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் 8 பேரும் உயிரிழந்துள்ளனர். இதனால் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22ஆக அதிகரித்துள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...