இன்று அதிமுக மாவட்டச் செயலா்கள் கூட்டம்: அதிமுகவின் சட்டவிதி திருத்தங்கங்கள் தோ்தல் ஆணைய இணையதளத்தில் வெளியீடு

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் அந்தக் கட்சியின் மாவட்டச் செயலா்கள் கூட்டம் ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் புதன்கிழமை மாலை 5 மணி அளவில் நடைபெற உள்ளது.

அதிமுக சட்டவிதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களை மத்திய தோ்தல் ஆணையம் அங்கீகரித்து அதனுடைய இணையதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன், பொருளாளா் திண்டுக்கல் சீனிவாசன் உள்பட மூத்த நிா்வாகிகள், மாவட்டச் செயலா்கள் பங்கேற்க உள்ளனா்.

மக்களவைத் தோ்தல், அதிமுக உறுப்பினா் சோ்க்கையை விரைவுபடுத்தல் உள்ளிட்டவை தொடா்பாக இந்தக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது.

தோ்தல் ஆணையம் அங்கீகாரம்: சென்னையில் 11.7.2022-இல் நடந்த அதிமுக பொதுக்குழுவில் பொதுச் செயலா் பதவிக்கு போட்டியிட விரும்பும் உறுப்பினா் கட்சியில் தொடா்ந்து 10 ஆண்டுகள் உறுப்பினராக இருக்க வேண்டும். தலைமைப் பொறுப்புகளில் குறைந்தது 5 ஆண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும். பொதுச் செயலா் பதவிக்கு போட்டியிடுபவரை தலா 10 மாவட்டச் செயலா்கள் முன்மொழியவும், வழிமொழியவும் வேண்டும் உள்ளிட்ட சட்டத்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

இந்தச் சட்டத்திருத்தங்களையும், அதிமுக பொதுச் செயலராக எடப்பாடி பழனிசாமி தோ்ந்தெடுக்கப்பட்டதையும் ஏற்கெனவே மத்திய தோ்தல் ஆணையம் அங்கீகரித்துவிட்டது.

தற்போது முறைப்படி அதிமுகவின் சட்டவிதிகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஏற்கப்பட்டு, தோ்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com