உயர்கல்வி கனவை நனவாக்கும் சீட்ஸ் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!

2023 ஆம் ஆண்டில் உயர்கல்விக்கான சீட்ஸ் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
உயர்கல்வி கனவை நனவாக்கும் சீட்ஸ் உதவித்தொகை பெற விண்ணப்பங்கள் வரவேற்பு!


2023 ஆம் ஆண்டில் உயர்கல்விக்கான சீட்ஸ் உதவித்தொகை பெறுவதற்கு தகுதியான மாணவ, மாணவிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வி, செழுமைப்படுத்துதல் மற்றும் ஒரு டிரீம் சொசைட்டியை மேம்படுத்துவதற்கான சேவை சீட்ஸ் (SEEEDS) 2017 இல் உலகம் முழுவதும் உள்ள வெற்றிகரமான வல்லுநர்கள் குழுவால் நிறுவப்பட்டது. 

சீட்ஸ்(SEEEDS) என்பது அரசு, அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூக-பொருளாதாரப் பின்னணியில் உள்ள திறமையான மாணவ, மாணவிகள், இலங்கை மறுவாழ்வு முகாம்களைச் சேர்ந்த குழந்தைகள், ஆதர இல்லாத குழந்தைகள் அல்லது அனாதை இல்லங்களில் உள்ள குழந்தைகள் உயர்கல்வி  பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டப்படிப்பை வழங்குவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தொண்டு நிறுவனமாகும்.

சீட்ஸ் தற்போது தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில் 500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு உதவி புரிந்து வருகிறது. 

2022 ஆம் ஆண்டில் தமிழ்நாட்டின் அனைத்து சமூகப் பிரிவினரிடமிருந்து 1500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை சீட்ஸ் பெற்றுள்ளது. தமிழ்நாடு முழுவதும் பரவியுள்ள 200க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களின் ஆதரவுடன் எங்களது தேர்வு செயல்முறை, இலங்கை புனர்வாழ்வு முகாமில் பங்கேற்ற  மாணவர்களில் 146 திறமையான மற்றும் தகுதியான மாணவர்களை அடையாளம் காண எங்களுக்கு உதவியது.

2023 ஆம் ஆண்டில் இந்தியாவின் தென் மாநிலங்களில் வசிக்கும் குறைந்தது 300 மாணவர்களுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அதன்படி, 2023 ஆம் ஆண்டில் 12 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, பாலிடெக்னிக் கல்லூரிகள் டிப்ளமோ படிப்புகள், கலை மற்றும் அறிவியல் பிற படிப்புகளுக்கு சீட்ஸ் உதவித்தொகை பெறுவதற்கு இந்தியாவில் உள்ள அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவ-மாணவியர்கள் விண்ணப்பிக்காலம். 

தகுதிகள்: 
* 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் கீழ்கண்ட படிப்புகளில் சேர உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். 

பொறியியல்
* 480க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள்
* 180க்கும் அதிகமான கட்-ஆஃப் பெற்றவர்கள்

மருத்துவம்
* அரசு மருத்துவக் கல்லூரியில் பயில இடம் பெற்றவர்கள்.
* 500க்கும் அதிகமான நீட் தேர்வில் மதிப்பெண் பெறுபவர்கள்.

துணை மருத்துவம்
* மருத்துவ கட்-ஆஃப் 180க்கும் அதிகமான மதிபெண் பெற்றவர்கள்

கலை, அறிவியல் மற்றும் பிற படிப்புகள்
* 480க்கும் அதிகமான மதிப்பெண்க பெற்றவர்கள்.

பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விருப்பும் 10 ஆம் வகுப்பு மாணவர்கள்(லேட்டரல் என்ட்ரி)
* பாலிடெக்னிக் டிப்ளமோவில் 80 சதவீதத்துக்கும் அதிகம் பெற்றவர்கள்.

பாலிடெனிக் கல்லூரியில் பயில விரும்பும் மாணவர்கள்
* பத்தாம் வகுப்பில் 350க்கும் அதிகமான மதிப்பெண் பெற்றவர்கள்.

எப்படி விண்ணப்பிப்பது? பட்டதாரி உயர் படிப்பைத் தொடர உதவித்தொகை கோரும் மாணவர்கள் https://www.seeeds.org அல்லது https://www.seeeds.org/scholarship என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.5.2023

தகுதியான மாணவ-மாணவிகள் யாரேனும் உங்களுக்குத் தெரிந்தால் admissions(at)seeeds.org என்ற இணைப்பு மூலம் தொடர்புகொள்ள செய்யவும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com