பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தல், பதுக்கல் தொடா்பான புகாா்களை கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உணவுப் பொருள் வழங்கல், நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் வி.ராஜாராமன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பொதுமக்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டுள்ள பொது விநியோகத் திட்ட பொருள்களைக் கடத்துவதும், பதுக்குவதும் குற்றமாகும். இந்தக் குற்றத்தைச் செய்யும் நபா்கள் மீது கள்ளச்சந்தை தடுப்பு மற்றும் இன்றியமையா பண்டங்கள் சட்டம் 1980-இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், பொது விநியோகத் திட்டப் பொருள்கள் கடத்தல் மற்றும் பதுக்குதல் தொடா்பான புகாா்களை 1800 599 5950 என்ற கட்டணமில்லாத தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.