ஜல்லிக்கட்டு போட்டி குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்புக்குகு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என்று ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளில் உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு வியாழக்கிழமை (மே 18) தீர்ப்பளித்துள்ளது.
சென்னை மெரீனாவில் நடைபெற்ற போராட்டங்களை சுட்டிக்காட்டி, ஜல்லிக்கட்டு தமிழ்நாட்டின் கலாசாரத்தோடு ஒருங்கிணைந்த பகுதி என்ற தமிழ்நாடு அரசின் சட்டத்திருத்தத்தை ஏற்றுக்கொள்வகிறோம் எனவும் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடையில்லை என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், 'தமிழர்தம் வீரத்தையும் பண்பாட்டையும் வெளிப்படுத்தும் விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தத் தடையில்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்திருப்பது தமிழ்நாட்டு வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கத்தக்கது!
தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அவசரச் சட்டம் செல்லும் என்பதை நிலைநாட்ட அரசு நடத்திய சட்டப்போராட்டத்துக்கு மகத்தான வெற்றி கிடைத்துள்ளது. அலங்காநல்லூரில் மாபெரும் ஜல்லிக்கட்டு மைதானத்தை நாம் கட்டி வருகிறோம். வரும் சனவரி மாதம் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு வெற்றி விழாவைக் கொண்டாடுவோம்' என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க | ஜல்லிக்கட்டு நடத்த தடையில்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.