
கோப்புப் படம்.
சென்னையில் நடந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்ததாக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அசோக் சக்கரவர்த்தி என்பரது சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதில், சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த 7 போட்டிகளுக்கான நேரடி, ஆன்லைன் டிக்கெட் விற்பனையில் முறைகேடு நடந்துள்ளதாகவும், ஆன்லைன் மூலம் விற்கப்பட்ட டிக்கெட்டுகளில் பெரும்பாலானவை கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிசிசிஐ, சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம், தமிழக கிரிக்கெட் சங்கம் ஆகியவை எதிர்மனுதாரர்களாக சேர்க்கப்பட்டுள்ள இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது. இதனிடையே சென்னை சேப்பாக்கம் விளையாட்டுத் திடலில் நடைபெறவுள்ள பிளே ஆஃப் போட்டிக்கான டிக்கெட்டுகள் ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யவுள்ளதாக சி.எஸ்.கே நிர்வாகம் அறிவித்துள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G