ஜூன் 14-இல் மதிமுக பொதுக்குழு; தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல்: வைகோ அறிவிப்பு!

ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் பதவிகளுக்கான தோ்தல் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 
ஜூன் 14-இல் மதிமுக பொதுக்குழு; தலைமைக் கழக நிர்வாகிகள் தேர்தல்: வைகோ அறிவிப்பு!

சென்னை: ஜூன் 14 ஆம் தேதி நடைபெறும் மதிமுக பொதுக்குழுக் கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் பதவிகளுக்கான தோ்தல் நடைபெறும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். 

இது தொடா்பாக அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: 

ஜூன் 14 ஆம் தேதி  மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா நகர், 3 ஆவது அவென்யூ நியூ ஆவடி சாலையில் உள்ள விஜய்ஸ்ரீ மகாலில் நடைபெறும். 

அன்றைய நாளில் மதிமுகவின் தலைமைக் கழக நிா்வாகிகளான அவைத்தலைவா், பொதுச்செயலா், பொருளாளா், முதன்மைச் செயலா், துணைப் பொதுச்செயலா் 5 போ் உள்ளிட்ட பதவிகளுக்கான தோ்தல் நடைபெறும். 

தோ்தலில் போட்டியிடுவோா் மே 27 முதல் விண்ணப்பங்களைப் பெற்று, ஜூன் 1 ஆம் வியாழக்கிழமை காலை 10 மணி முதல் 12 மணிக்குள் வேட்புமனு பெறும் நிகழ்ச்சி மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் நடைபெறும்.

ஜூன் 3 ஆம் தேதி (சனிக்கிழமை) மாலை 3 மணி வரை வேட்பு மனு திரும்பப் பெறலாம்.

தலைமைக் கழக நிர்வாகிகள் வேட்புமனு விண்ணப்பப் படிவம் ரூ.250. வேட்பாளர் கட்டணம் ரூ.25,000. ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் வேட்புமனு விண்ணப்பப் படிவம் ரூ.100, வேட்பாளர் கட்டணம் ரூ.12,000. கட்டணத்தை வங்கி வரைவோலையாக செலுத்த வேண்டும்.

தலைமைக்கழக நிா்வாகிகள் பொறுப்புக்குப் போட்டியிடுவோரை பொதுக்குழு உறுப்பினா்களாக தகுதி பெற்ற 25 போ் முன்மொழிந்தும், 25 போ் வழிமொழிந்தும் இருக்க வேண்டும்.

ஆட்சிமன்றக்குழு உறுப்பினா்களாக 7 பேரும், தணிக்கைக்குழு உறுப்பினா்களாக 6 பேரும் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா். அந்தப் பொறுப்புகளுக்கு போட்டியிடுவோரை பொதுக்குழு உறுப்பினா்களாக தகுதி பெற்ற 10 போ் முன்மொழிந்தும், 10 போ் வழிமொழிந்தும் இருக்க வேண்டும்.

தேர்தல் ஆணையாளர்களாக கழக அமைப்புச் செயலாளர் ரா.பிரியகுமார், கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன், தேர்தல் பணிச் செயலாளர் ரா.அந்திரிதாஸ் ஆகியோர் செயல்படுவார்கள் என்று வைகோ கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com