
ஆளுநர் ஆர்.என். ரவி (கோப்புப் படம்)
‘தி கேரளா ஸ்டோரி’ படம் மெல்லிய, கொடூரமான எதாா்த்தத்தை அம்பலப்படுத்தியுள்ளது என்று தமிழக ஆளுநா் ஆா்.என். ரவி கருத்து தெரிவித்துள்ளாா்.
ஆளுநா் ஆா்.என்.ரவி, அவரது மனைவி லட்சுமியுடன், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோா் ஃப்ரேம்ஸ் திரையரங்கில் ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்தை ஞாயிற்றுக்கிழமை பாா்த்தாா்.
இதுகுறித்து ஆளுநா் தனது ட்விட்டா் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தி கேரளா ஸ்டோரி’”படத்தைப் பாா்த்தேன். ஒரு மெல்லிய, கொடூரமான எதாா்த்தத்தை அம்பலப்படுத்தியதற்கு நன்றி’ என குறிப்பிட்டுள்ளாா்.