
எடப்பாடி பழனிசாமி(கோப்புப்படம்)
தமிழகம் முழுவதும் வருகின்ற மே 29-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாரயத்தால் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தக் கோரி தொண்டர்களுடன் பேரணியாக சென்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து புகார் அளித்தார்.
இந்நிலையில், கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுபானங்களால் இறப்பு, கொலை, கொள்ளை, வழிப்பறி உள்ளிட்ட சட்டம்-ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தவறிய தமிழக அரசை கண்டித்தும், முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும் மே 29-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
மேலும், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள், வட்டாச்சியர் அலுவலகங்களுக்கு வெளியே மாவட்ட அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.