

சென்னை கிண்டி ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சந்தித்தார்.
போலி மது, கள்ளச்சாராய இறப்பு குறித்து உரிய விசாரணை நடத்தக்கோரி ஆளுநரிடம் அவர் மனு அளித்தார். பழனிசாமியுடன் அதிமுக அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், தங்கமணி, வேலுமணி, செல்லூர் ராஜூ, ஜெயக்குமார் உடனிருந்தனர்.
முன்னதாக எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியாகச் சென்று அதிமுகவினர் இந்த மனுவை அளித்தனர். இதனால் சென்னையில் ஒருசில இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.