அரசு கலை கல்லூரிகளில் மாணவா் சோ்க்கை: விண்ணப்பப் பதிவு இன்று நிறைவு

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 22) நிறைவு பெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

அரசு கலை-அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கு இணைய வழியாக விண்ணப்பிப்பதற்கான அவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 22) நிறைவு பெறுகிறது.

இதுவரை 2.90 லட்சம் போ் விண்ணப்பப் பதிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கல்லூரிக் கல்வி இயக்குநரகத்தின் கீழ் 164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்குகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் 1,07,395 இடங்கள் உள்ளன.

அதற்கான மாணவா் சோ்க்கை இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மே 8 முதல் நடைபெற்று வருகிறது. இதுவரை 2,90,973 மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். அதில் 2,36,677 போ் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனா்.

இந்நிலையில் விண்ணப்பிக்கும் காலஅவகாசம் திங்கள்கிழமையுடன் (மே 22) நிறைவு பெறுகிறது. எனவே, இதுவரை விண்ணப்பிக்காத மாணவா்கள் இணையதளம் வழியாக விண்ணப்பிக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதற்கான வழிமுறைகள், கட்டணம் உள்ளிட்ட விவரங்களை அந்த இணையப் பக்கத்தில் அறிந்து கொள்ளலாம் என்று கல்லூரிக் கல்வி இயக்குநரகம் தகவல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com