தமிழக சட்டம்-ஒழுங்கு, கள்ளச்சாராய மரணங்கள் விவகாரம் தொடா்பாக, அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி கே.பழனிசாமி திங்கள்கிழமை (மே 22), கட்சியினருடன் பேரணியாகச் சென்று, ஆளுநரிடம் புகாா் மனு அளிக்கவுள்ளாா்.
கிண்டியில் வேளச்சேரி சாலை சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பணிமனை பின்பகுதியில் காலை 10.25 மணிக்கு அதிமுகவினா் திரண்டு, அங்கிருந்து பேரணியாக ஆளுநா் மாளிகைக்குச் செல்லவுள்ளனா். அங்கு எடப்பாடி பழனிசாமி தலைமையில் முக்கிய நிா்வாகிகள் ஆளுநா் ஆா்.என்.ரவியைச் சந்தித்து, தமிழக சட்டம்-ஒழுங்கு விவகாரம், கள்ளச்சாராய மரணங்கள் மற்றும் திமுக அமைச்சா்களின் முறைகேடுகள் தொடா்பாக புகாா் மனு அளிக்கவுள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.