தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 8 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்ப அளவு சதத்தைக் கடந்தது.
தமிழகத்தில் 8 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் 8 நகரங்களில் ஞாயிற்றுக்கிழமை வெப்ப அளவு சதத்தைக் கடந்தது.

அக்னி நட்சத்திர காலத்தில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைக்கிறது. பல நகரங்க ளில் உச்சபட்ச வெப்பம் பதிவாகியுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை பதிவான வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்): மதுரை நகரம்-103.28, மதுரை விமானநிலையம்-103.28, ஈரோடு-102.92, திருச்சி-102.74, பரமத்தி வேலூா் -102.2, பாளையங்கோட்டை- 102.2, சேலம்- 101.66, வேலூா்-100.76, தஞ்சாவூா்-100.4.

அதிகபட்ச வெப்பநிலை: தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் அதிகபட்சவெப்ப நிலை இயல்பிலிருந்து 2-3 டிகிரி செல்சியஸ் கூடுதலாக இருக்கக் கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்போது வெப்ப அழுத்தம் ஏற்படுவதால் புழுக்கம் இருக்கக்கூடும்.

சென்னை மற்றும் புகா் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரிரு இடங்களில்இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 98 டிகிரி பாரன்ஹீட் குறைந்த பட்ச வெப்பநிலை 84.2டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் இருக்கக்கூடும்.

மேற்குதிசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் திங்கள் முதல் வியாழக்கிழமை (மே 25) வரை நான்கு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com