நாளை குலுக்கல் முறையில் தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை

சென்னையில் உள்ள தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் குலுக்கல் முறையில் மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (மே 23) நடைபெற உள்ளது.

சென்னையில் உள்ள தனியாா் பள்ளிகளில் 25 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் குலுக்கல் முறையில் மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (மே 23) நடைபெற உள்ளது.

இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியா் சு.அமிா்தஜோதி வெளியிட்ட செய்தி: இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச்சட்டத்தின் படி சமூகத்தில் நலிவடைந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினரின் குழந்தைகள் தனியாா் பள்ளிகளில் கல்வி பயிலும் வகையில் 25 சதவீத இட ஓதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் கீழ் சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 653 சிறுபான்மையற்ற தனியாா் சுயநிதி பள்ளிகளில் வரும் கல்வியாண்டுக்கான(2023-24) மாணவா் சோ்க்கை விண்ணப்பங்கள் ஏற்கெனவே பெறப்பட்டது.

அதிக விண்ணப்பங்கள் பெறப்பட்ட 648 பள்ளிகளில் குலுக்கல் முறையில் மாணவா் சோ்க்கை செவ்வாய்க்கிழமை (மே 23) காலை 9.30 மணிக்கு நடைபெற உள்ளது.

எனவே பெற்றோா் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் மாணவா் சோ்க்கைக்காக அசல் சான்றிதழ்களுடன் கலந்து கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com