கலை, அறிவியல் கல்லூரிகளில் 1,07,395 இடங்களுக்கு 2.99 லட்சம் பேர் போட்டி

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on
Updated on
1 min read

தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில், மொத்தமுள்ள 1 லட்சத்து 7 ஆயிரத்து 395 இடங்களுக்கு, 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் விண்ணப்பித்துள்ளனர்.

தமிழகத்தில் கல்லூரி கல்வி இயக்குநகரத்தின் கீழ்164 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு கடந்த 8-ஆம் தேதி முதல் தொடங்கி திங்கள்கிழமை நிறைவுபெற்றது.

இந்த நிலையில், 1 லட்சத்து 15 ஆயிரத்து 752 மாணவர்கள், 1 லட்சத்து 28 ஆயிரத்து 274 மாணவிகள், மூன்றாம் பாலினத்தவர் 78 பேர் என மொத்தம் 2 லட்சத்து 99 ஆயிரத்து 558 பேர் விண்ணப்பித்துள்ளனர். இதில் 2 லட்சத்து 44 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com