புதிய முதலீடுகளை ஈர்க்க ஜப்பான், சிங்கப்பூருக்கு பயணம்: மு.க.ஸ்டாலின் பேட்டி

புதிய முதலீடுகளை ஈர்க்க ஜப்பான், சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்

புதிய முதலீடுகளை ஈர்க்க, உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைக்க ஜப்பான், சிங்கப்பூர் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

தொழில் முதலீடுகளை ஈா்க்க, சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று (செவ்வாய்க்கிழமை ) பயணம் மேற்கொள்ளவுள்ளாா். 

தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவும், வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூா் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வா் ஸ்டாலின் பயணம் மேற்கொள்வதாகவும் இந்தப் பயணத்தில் முதல்வருடன் தொழில் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் செல்வதாகவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் வெளிநாடு செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், 'புதிய முதலீடுகளை ஈர்க்க 9 நாட்கள் பயணமாக ஜப்பான், சிங்கப்பூருக்கு சென்று தொழிலதிபர்களை சந்தித்து பேசவிருக்கிறேன். முதலீட்டாளர்களை சந்தித்து 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கிறேன். இந்த பயணத்தின் மூலமாக அதிக முதலீடுகள் தமிழ்நாட்டிற்கு வரும். 

துபாய் பயணத்தின் மூலம் ரூ. 6000 கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டன. துபாய் பயணத்தின்போது ஒப்பந்தமான 6 நிறுவனங்கள் பணிகளை தொடங்கிவிட்டன. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு இரண்டு லட்சத்து 95 ஆயிரம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. நான்கு லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது' என்று பேசினார். 

முன்னதாக சென்னை மெரீனாவில் அண்ணா, கருணாநிதி நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com