
தமிழக அரசு
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் மொழி கட்டாய பாடமாக இருக்க வேண்டும் என்று தனியார், மெட்ரிக் பள்ளிகள் இயக்குநர் நாகராஜ முருகன் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த சுற்றறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
தமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ உள்பட அனைத்து வகையான தனியார் பள்ளிகளிலும் இனி தமிழ் மொழி கட்டாயப் பாடமாக இருக்க வேண்டும். தகுதியான ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களுக்கு தமிழ் கற்றுத் தரவேண்டும்.
2023 - 2024 கல்வியாண்டில் 9-ஆம் வகுப்பு வரையும், 2024 - 2025 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்பு வரையும் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்படுகிறது. அடுத்த கல்வியாண்டில் அனைத்து மாணவர்களும் பொதுத்தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் எழுத வேண்டும்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...