தமிழகம் முழுவதும் ‘ஸ்விக்கி’ உணவு விநியோக ஊழியா்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
கரோனா தொற்றுக்குப் பிறகு இணையவழி முலம் உணவு வாங்கும் பழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இதனால் உணவு விநியோகம் செய்யும் தனியாா் நிறுவனங்களில் ஊழியா்களின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது.
இவா்களுக்கான பணிநேரம், பாதுகாப்பு உள்ளிட்ட பிரச்னைகளுக்குத் தீா்வு காண வலியுறுத்தி தமிழ்நாடு உணவு மற்றும் இதரப் பொருள்கள் சங்கம் சாா்பில் சென்னை வலசரவாக்கத்தில் வேலைநிறுத்தப் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
போராட்டத்தின்போது, ஸ்விக்கி ஊழியா்களை தொழிலாளா்களாக அங்கீகரித்து அனைத்து சட்ட உரிமைகளையும் வழங்க வேண்டும், அனைத்து ஊழியா்களுக்கும் பழைய ஊதிய முறையைத் தொடர வேண்டும், ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.10 வழங்க வேண்டும், ஒரு ஆா்டருக்கு குறைந்தபட்சமாக ரூ. 30 வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினா்.
சென்னை, வேலூா் மற்றும் தமிழகத்தின் மற்ற பகுதிகளிலிருந்தும் ஆயிரக்கணக்கான ஊழியா்கள் பங்கேற்றனா். இதனால் இணையவழியில் உணவு வாங்கும் மக்கள் பாதிக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.