
நிகழாண்டில் தமிழகத்தில் கோடை மழை இயல்பைவிட 72 சதவீதம் கூடுதலாக பெய்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பா. செந்தாமரை கண்ணன் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: கோடை காலத்தில் ஏற்படும் மேற்கு திசை காற்று மாறுபாடு, வெப்பசலம், காரணமாக கோடை மழை பொழிவு இருக்கும்.
அதன்படி, இந்த ஆண்டு அனைத்து மாவட்டங்களிலும் கோடை மழை பரவலாக பெய்துள்ளது. தமிழகத்தில் இயல்பான கோடை மழை 108. 5 மி.மீ. ஆகும். ஆனால், இந்த ஆண்டு இயல்பைவிட கூடுதலாக 186.5 மி.மீ. மழை பெய்துள்ளது. இது இயல்பைவிட 72 சதவீதம் அதிகம் என்றாா் அவா்.