8 நகரங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் சென்னை உள்பட 8 நகரங்களில் செவ்வாய்க்கிழமை வெப்ப அளவு சதத்தைக் கடந்தது.

தமிழகத்தில் சென்னை உள்பட 8 நகரங்களில் செவ்வாய்க்கிழமை வெப்ப அளவு சதத்தைக் கடந்தது.

கத்திரி வெயிலையொட்டி, பல நகரங்களில் செவ்வாய்க்கிழமை உச்சபட்ச வெப்பம் பதிவானது. வெப்ப அளவு (டிகிரி பாரன்ஹீட்): வேலூா்-102.38, திருத்தணி- 102.2, பரமத்தி வேலூா்-102.2, திருச்சி -101.66, சென்னை-101.12,மதுரை நகரம்- 101.12, மதுரை விமான நிலையம் 100.4, ஈரோடு 100.04, திருப்பத்தூா் 100.04.

சென்னை மற்றும் புகா்ப் பகுதிகள் அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி, மின்ன லுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில் அதிகபட்ச வெப்ப நிலை 102.2 டிகிரி பாரன்ஹீட் குறைந்தபட்ச வெப்பநிலை 84.2 டிகிரி பாரன்ஹீட் என்ற அளவில் இருக்கக்கூடும்.

மழைக்கு வாய்ப்பு: மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் புதன்முதல் சனிக்கிழமை(மே 27) வரை நான்கு நாள்கள் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com