சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
சிங்கப்பூர் அமைச்சர்கள், தொழிலதிபர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

சிங்கப்பூர் அமைச்சர்கள் மற்றும் முன்னணி தொழிலதிபர்களுடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தொழில் முதலீடுகளை ஈா்ப்பதற்காகவும், சென்னையில் அடுத்த ஆண்டு ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு தொழில் நிறுவனங்களின் அதிபா்களுக்கு அழைப்பு விடுப்பதற்காகவும் சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டுள்ள முதல்வா் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூருக்கு செவ்வாய்க்கிழமை சென்றடைந்தாா்.

இந்நிலையில், சிங்கப்பூர் அமைச்சர்கள், முன்னணி தொழில் நிறுவனமான டெமாசெக் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி திலன் பிள்ளை சந்திரசேகரா மற்றும் செம்கார்ப் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி கிம்யின் ஒங் ஆகியோருடன்  இன்று காலை ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையின்போது தமிழக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலர் வெ.இறையன்பு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

மொத்தம் 9 நாள்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள முதல்வர் ஸ்டாலின், சிங்கப்பூரை தொடர்ந்து ஜப்பான் நாட்டுக்கு செல்லவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com