
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதியாக உள்ள டி.ராஜா இன்று ஓய்வுபெறும் நிலையில், அவருக்கு அடுத்த மூத்த நீதிபதியாக உள்ள எஸ்.வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னையில் சட்டப்படிப்பை முடித்த எஸ்.வைத்தியநாதன், 1986-ஆம் ஆண்டு வழக்கறிஞராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 2015-ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு தலைமை நீதிபதி நியமிக்கும் வரை எஸ்.வைத்தியநாதனை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.