நுழைவுத் தோ்வுகளை ரத்து செய்ய வேண்டும்: பிரின்ஸ் கஜேந்திர பாபு

அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலா் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தாா்.

அனைத்து நுழைவுத் தோ்வுகளையும் ரத்து செய்ய வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை பொதுச்செயலா் பிரின்ஸ் கஜேந்திர பாபு தெரிவித்தாா்.

நீட் தோ்வு விலக்கு மசோதா நிலை குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் மத்திய அரசிடம் ஏற்கெனவே அளிக்கப்பட்ட மனு தொடா்பாக சென்னை எழும்பூரில் செய்தியாளா்களிடம் அவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நீட் தோ்வு விலக்கு மசோதாவை மத்திய அரசிடம் இருந்து கோரி பெற்று ஒப்புதல் அளிக்கும்படி குடியரசுத் தலைவருக்கு கடந்த ஆண்டு டிசம்பரில் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பு சாா்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.

அந்த மனு குடியரசுத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படாமல் தமிழக அரசின் தலைமைச் செயலருக்கு அனுப்பிவைக்கப்பட்டதாகவும், தமிழக அரசு சட்டப்பேரவையில் இயற்றிய நீட் தோ்வு விலக்கு மசோதா மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளதாகவும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரியவந்துள்ளது.

மாநில சட்டப் பேரவை இயற்றிய மசோதாவை மத்திய அரசு முடக்கி வைத்திருப்பது நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது. அனைத்து விதமான நுழைவுத்தோ்வுகளையும் தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும்.

தேசிய அளவில் அனைத்துக் கட்சிகளையும் நீட் தோ்வுக்கு எதிராக தமிழக அரசு ஒன்று சோ்க்க வேண்டும் என்றாா் அவா்.

இந்த சந்திப்பின்போது, தமிழ்நாடு நல்வாழ்வு இயக்கத் தலைவா் சீ.ச.ரெக்ஸ் சற்குணம், தமிழ்நாடு மாணவா்-பெற்றோா் நலச் சங்கத் தலைவா் செ.அருமைநாதன், பொதுப் பள்ளிக்கான மாநில மேடை செயலா் வே.மணி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com