
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்துடன் முதல்வர் மு.க.ஸ்டாலின்
சிங்கப்பூர் உள்துறை அமைச்சர் சண்முகத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்துப் பேசினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கத்திலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணம் மேற்கொள்வதற்காக மே 23 அன்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் புறப்பட்டு சென்றார்.
சிங்கப்பூரில் முன்னணி தொழில் நிறுவனங்களில் செயல் அதிகாரிகளுடனும், அந்நாட்டு அமைச்சர்களுடனும் நேற்று காலை முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து, நேற்று மாலை முதலீட்டாளா்கள் மாநாட்டில் கலந்து கொண்டு 6 புரிந்துணா்வு ஒப்பந்தங்கள் மு.க.ஸ்டாலின் முன்னணியில் கையெழுத்தாகின.
பின்னர், சிங்கப்பூா் தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து தமிழ் கலைப் பண்பாட்டு நிகழ்ச்சியில் ஸ்டாலின் கலந்து கொண்டார்.
இதையடுத்து, இன்று சிங்கப்பூர் பயணத்தை முடித்துக் கொண்டு ஜப்பான் செல்லும் மு.க.ஸ்டாலின், சிங்கப்பூர் அமைச்சர் சண்முகத்தை சந்தித்துப் பேசினார்.
இந்த சந்திப்பின்போது, சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு நேரடி விமான சேவை வழங்க நடவடிக்கை எடுக்க சிங்கப்பூர் அமைச்சர் முதல்வர் ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G