தமிழ்வழிப் பாடப்பிரிவுகள் சேர்க்கை நடைபெறும்: அண்ணா பல்கலை. துணை வேந்தர்

அண்ணா பல்கலைக்கழக 11 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழிப் பாடப்பிரிவுகள் சேர்க்கை இந்த ஆண்டு தொடரும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல் ராஜ் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்

அண்ணா பல்கலைக்கழக 11 உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழிப் பாடப்பிரிவுகள் சேர்க்கை இந்த ஆண்டு தொடரும் என அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல் ராஜ் தெரிவித்துள்ளார். 

முன்னதாக, 2023-2024 கல்வியாண்டு முதல் அண்ணா பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில் இளங்கலை பொறியியல் பட்டப்படிப்புகளுக்கான சில தமிழ், ஆங்கில வழி பாடப்பிரிவுகள் தற்காலிகமாக நீக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்திருந்த நிலையில் தற்போது அந்த அறிவிப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது. 

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 16 உறுப்புக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் மாணவர் சேர்க்கை மிகவும் குறைவாக இருப்பதால் நடப்பு கல்வியாண்டு (2023-2024) முதல் பல்கலைக்கழகத்தின் 11 உறுப்புக் கல்லூரிகளில் பல்வேறு தமிழ் மற்றும் ஆங்கில வழி இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது. 

ஆரணி, திண்டிவனம், விழுப்புரம், திண்டுக்கல், ராமநாதபுரம், அரியலூர், பண்ருட்டி, பட்டுக்கோட்டை, திருக்குவளை, நாகர்கோயில், தூத்துக்குடி ஆகிய 11 உறுப்புக் கல்லூரிகளில் சில இளங்கலை பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை வெளியிட்டது. 

இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கைக்கு ஏற்பவும், உயர்கல்வித்துறை அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரிலும் இந்த உத்தரவு வாபஸ் பெறுவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல் ராஜ் தெரிவித்துள்ளார். 

மேலும் நடப்பு கல்வியாண்டில் மேற்குறிப்பிட்ட கல்லூரிகளில் அனைத்துப் பாடப்பிரிவுகளுக்கும் சேர்க்கை நடைபெறும் என்றும் இதனை தற்காலிகமாக நிறுத்திவைப்பது குறித்து அடுத்த ஆண்டு முடிவு செய்வோம் என்றும் கூறியுள்ளார். 

அதுமட்டுமின்றி, 'அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் தமிழ்வழி என்றில்லாமல் பொதுவாகவே சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் குறைவாகவே சேர்கின்றனர். மேற்குறிப்பிட்ட 11 கல்லூரிகளில் தமிழ்வழி சிவில், மெக்கானிக்கல் பாடப்பிரிவுகளில் 10க்கும் குறைவான மாணவர்களே சேர்கின்றனர். தனியார் கல்லூரிகளிலும் கூட இந்த படிப்புகளுக்கு சேர்க்கை மிகவும் குறைவாக உள்ளது' என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com