
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், கணக்கு விவரங்களைப் பதிவிறக்கம் செய்யலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு சாா்பில் வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:-
ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 5 லட்சத்து 45 ஆயிரத்து 297 அரசுப் பணியாளா்கள், ஆசிரியா்கள் உள்ளனா். கடந்த நிதியாண்டுக்கான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டக் கணக்கு விவரங்கள் அனைத்தும் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்த விவரங்கள் அனைத்தும் அரசுத் தகவல் தொகுப்பு விவர மையத்தால், வெள்ளிக்கிழமை (மே 26) காலை 10 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மேலும், ஸ்ரீல்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ல்ன்க்ஷப்ண்ஸ்ரீ என்ற இணையதள முகவரியிலும் பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட கணக்கு விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.